NILAI, March 27 — Chairman of the National Water Services Commission (SPAN) Charles Santiago delivering his speech at The First International Conference on Contemporary Issues 2019 today. –fotoBERNAMA (2019) COPYRIGHT RESERVED
SELANGOR

செமினி தண்ணீர் சுத்திகரிப்பு நிலைய தூய்மைக்கேடு: முழு அறிக்கை அடுத்த வாரம் தயாராகிவிடும்

நீலாய், ஜூலை 2-

செமினி தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தூய்மைக்கேடு சம்பவம் மீதான முழு அறிக்கை அடுத்த வாரம் தயாராகிவிடும் என்று தேசிய குடிநீர் சேவை ஆணையத்தின் (ஸ்பான்) தலைவர் சார்லஸ் சந்தியாகோ தெரிவித்தார்.

இந்த அறிக்கை தொடர் நடவடிக்கைக்காக நீர், நில, இயற்கை வள துறை அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமாரிடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் கூறினார்.
“புலன் விசாரணை தொடங்கப்பட்டு விட்டது. தூய்மைக்கேட்டிற்குக் காரணமானவர்கள் விளக்கம் கூற அழைக்கப்பட்டுள்ளனர். இதே போன்ற நடவடிக்கையை சிலாங்கூர் அரசாங்கமும் மேற்கொள்ளும் என்று நம்புகிறேன் ” என்றார் அவர்.

” முழு அறிக்கை அடுத்த வாரம் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று இங்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.
இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே முக்கியம் என்றார் அவர்.


Pengarang :