KUALA LUMPUR, 10 April — Perdana Menteri Tun Dr Mahathir Mohamad (tengah) bersama Menteri Hal Ehwal Ekonomi Datuk Seri Mohamed Azmin Ali (belakang, tengah) meninggalkan lobi Dewan Rakyat selepas sidang media di Bangunan Parlimen hari ini. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

துன் மகாதீர் ஒரு தவணைக்கு பிரதமராக வேண்டும்! -பரிந்துரையை ஆதரித்தார் அஸ்மின்

ஷா ஆலாம், ஜூலை 29-

துன் டாக்டர் மகாதீர் முகமது தவணை காலம் முடியும் வரை பிரதமராக நீடிக்க வேண்டும் என்ற பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கின் நிலைப்பாட்டை பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி வரவேற்றார்.
நாடு மீண்டும் ஒளிமயமான தடத்தில் செல்வதற்கான முயற்சி விரைவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இதற்கு முன்பு ஹாடி வெளியிட்ட கருத்துக்கு ஏற்ப அவரின் இந்த நிலைப்பாடு அமைந்திருப்பதாகவும் அஸ்மின் குறிப்பிட்டார்.

“பிரதமர் மீது எதிர்கட்சிகள் கொண்டுள்ள இத்தகு நிலைப்பாடு மலேசிய அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதைக் காண முடிகிறது” என்றார்.

” வாக்களிக்கும் வயது 18ஆகக் குறைக்கப்பட்டதன் வழி அரசியலமைப்புச் சட்ட திருத்தத்தை அங்கீகரித்ததன் வழி இது நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :