NATIONAL

நெரிசல் கட்டண முறை: பயனீட்டாளர்கள் பணத்தை மிச்சப்படுத்தலாம்

கோலாலம்பூர், ஜூலை 9-

நான்கு நெடுஞ்சாலைகளின் நிர்வாகத்தை அரசாங்கம் எடுத்துக் கொண்டதோடு டோல் கட்டணத்திற்குப் பதிலாக போக்குவரத்து நெரிசல் கட்டணத்தை அறிமுகப் படுத்துவதன் காரணமாக பயனீட்டாளர்கள் சுமார் 2 பில்லியன் வெள்ளியை மிச்சப்படுத்துவர் என்று நிதி அமைச்சு தெரிவித்தது.

டாமன்சாரா – பூச்சோங் நெடுஞ்சாலை (எல்டிபி), ஸ்பிரிண்ட் நெடுஞ்சாலை, கெசாஸ் நெடுஞ்சாலை மற்றும் ஸ்மார்ட் எனும் விவேக சுரங்கப் பாதை ஆகியவையே சம்பந்தப்பட்ட 4 நெடுஞ்சாலைகள் ஆகும்.
அறிமுகப்படுத்தப்படவிருக்கும் நெரிசல் நேரக் கட்டணமானது நெரிசல் இல்லாத பரபரப்பான நேரத்தில் 30 விழுக்காடு வரை கழிவு வழங்கப்படும். அதே வேளையில், பரபரப்பில்லாத நேரத்தில் கட்டணம் ஏதும் விதிக்கப்படமாட்டாது என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவோர் ஒவ்வோர் ஆண்டும் 180 மில்லியன் வெள்ளி வரை மிச்சப்படுத்துவர். எனவே இந்த நெடுஞ்சாலைகளின் குத்தகை காலம் முடியும் வரை சாலை பயனர்கள் 2 பில்லியன் வெள்ளி வரை சேமிக்க இயலும் என்றார் அவர்.


Pengarang :