SELANGOR

பசுமை குறித்து தஸ்கா மாணவர்களுக்கு ‘கிஃப்ட்’ போதிக்கும்

ஷா ஆலம், ஜூலை 4-

ஷா ஆலம் மாநகரை 2030ஆம் ஆண்டு வாக்கில் குறைந்த அளவிலான கரியமிலவாயுவை வெளியேற்றும் மாநகரமாக உருமாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக தஸ்காவில் பசுமை (கிஃப்ட்) என்ற திட்டத்தை ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) அறிமுகப்படுத்தியது.

அன்றாட வாழ்க்கையில் பசுமைக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்து இளம் தலைமுறையினருக்கு குறிப்பாக பாலர் பள்ளி மாணவர்களுக்கு போதிக்கும் திட்டமானது தனது தரப்பின் தொடர் முயற்சிகளில் ஒன்றாகும் என்று எம்பிஎஸ்ஏ மேயர் டத்தோ ஹாரிஸ் காசிம் தெரிவித்தார்.
சிலாங்கூர் தஸ்கா சங்கம் மற்றும் சிலாங்கூர் சமூக மேம்பாட்டு இலாகா ஆகியவற்றின் ஒத்துழைப்போடு ‘கிஃப்ட்’ எனும் இவ்வியக்கம் ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

மேலும், தஸ்காவின் பாடத் திட்டங்களான அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களோடு வாழ்க்கையில் பசுமையின் முக்கியத்துவம் குறித்தும் போதிக்கப்படும் என்றார் அவர்.


Pengarang :