SELANGOR

பல்வேறு கலாச்சார அமைப்புகள் சிலாங்கூர் சுற்றுலா துறையின் தனிச்சிறப்பு

கிள்ளான் துறைமுகம், ஜூலை 1-

சிலாங்கூரில் காணப்படும் பல்வேறு கலாச்சாரங்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் பார்வையில் தனித்து விளங்குவதற்கு வழி வகுத்துள்ளன.
வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் மலேசியாவில் குறிப்பாக சிலாங்கூரில் பல இன மக்கள் ஒன்றிணைந்து வாழும் வாழ்க்கை முறையைக் கண்டு பரவசப்படுகின்றனர் என்று சுற்றுலா மற்றும் கலாச்சார, மலாய் நாகரீகம் மற்றும் பண்பாடு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அப்துல் ரஷிட் அஸ்ரி கூறினார்.

“பல்வேறு சமய, கலாச்சாரங்களோடு வரலாற்று இடங்கள், பொருட்கள் வாங்குவதற்கான சொர்கபுரியாக இம்மாநிலம் திகழ்கிறது” என்றார்.
இவற்றோடு சுற்றுப் பயணிகள் ருசித்து உண்பதற்கு பல்வேறு உணவு வகைகளை இங்கிருப்பது மற்றோரு சிறப்பாகும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :