PDRM dikesan membayar RM2.7 juta untuk penukaran alat ganti fotografi, melebihi had siling yang ditetapkan iaitu RM209,964.
NATIONALSELANGOR

பாலியல் வீடியோ விவகாரம்: காவல் நீட்டிப்பு !!

ஷா ஆலம், ஜூலை 21:

பாலியல் காணொளி விவகாரம் தொடர்பில் அந்தக் காணொளியில் காணப்பட்ட நபர் என்று ஒப்புக் கொண்ட ஹாஸிக் அப்துல்லா உட்பட அறுவர் இந்த விசாரணைக்கு உதவும் பொருட்டு 6 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

கெஅடிலான் கட்சியின் சந்துபோங் கிளையின் முன்னாள் இளைஞர் பிரிவு தலைவர் ஹாஸிக் குற்றவியல் சட்டம் பிரிவு 377பி மற்றும் 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் பிரிவு 233இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.

பாலியல் காணொளியில் காணப்பட்ட ஒரு நபர் தான் என்றும் மற்றொருவர் பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி என்றும் இதற்கு முன்பு ஹாஸிக் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஹாஸிக் கடந்த ஜூன் 14ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :