SEPANG, 22 Julai — Perdana Menteri Tun Dr Mahathir Mohamad menyampaikan ucapan semasa majlis pelancaran logo kempen Melawat Malaysia (VM) 2020 di Lapangan Terbang Antarabangsa Kuala Lumpur (KLIA) hari ini. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

பிஏசி அறிக்கை: ஜிஎஸ்டி வசூலித்த தொகை காணாமல் போகவில்லை

கோலாலம்பூர், ஜூலை 15-
நிதியமைச்சின் கீழ் செயல்படும் அரச மலேசிய சுங்க இலாகா வசூலித்த ஜிஎஸ்டி வரியில் வர்த்தகளுக்குத் திரும்பச் செலுத்த வேண்டிய 19.4 பில்லியன் வெள்ளி காணாமல் போகவில்லை என்று தேசிய கணக்காய்வு செயற்குழுவின் (பிஏசி) விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திரும்பச் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி வரி கணக்கில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டிய தொகை, நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு செலவிடப்பட்டுள்ளன என்று அக்குழுவின் தலைவர் டத்தோ டாக்டர் நோராய்னி அகமது நாடாளுமன்றக் கூட்டத்தில் தெரிவித்தார்.

எனினும், வசூலிக்கப்பட்ட மொத்த வரியில் 65 விழுக்காட்டை நிகர லாபம் என்று முந்தைய அரசாங்கம் தவறாகக் கணித்துள்ளது என்று நோராய்னி சுட்டிக் காட்டினார். அதே வேளையில், வசூலித்த மொத்த வரியையும் ஒன்றிணைக்கப்பட்ட வரி கணக்கில் சேர்ப்பித்த முந்தைய அரசாங்கத்தின் நடவடிக்கயானது 2014ஆம் ஆண்டு ஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவு 54(5) வரையறுத்த வழிமுறைக்கு ஏற்ப அமைந்திருக்கவில்லை என்று அவர் சொன்னார்.


Pengarang :