NATIONAL

முதலீடு செய்வதற்கு உலகிலேயே மிகச் சிறந்த நாடு மலேசியா- சிஇஓ சஞ்சிகை ஆய்வு

கோலாலம்பூர், ஜூலை 11:

முதலீடு செய்வதற்கும் வர்த்தகம் புரிவதற்கும் உலகிலேயே மிகச் சிறந்த நாடு மலேசியா என்று சிஇஓ வேர்ல்ட் எனும் சஞ்சிகை கூறியது. 67 நாடுகளைச் சேர்ந்த வணிகர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மலேசியாவிற்கு அடுத்த நிலையில் போலந்து நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அதற்கடுத்து பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முன்னணி வரிசையில் உள்ளன.

ஊழல், சுதந்திரம் ( தனிநபர், வர்த்தகம் மற்றும் நிதி), ஆள் பலம், முதலீட்டாளர் பாதுகாப்பு, அடிப்படை வசதி, வாழ்க்கைச் செலவின வரி, அதிகாரத்துவம் மற்றும் தொழில்நுட்ப வசதி ஆகிய 11 அம்சங்கள் அடிப்படையில் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக சிஇஓ சஞ்சிகை தெரிவித்தது.

அந்த ஆய்வில் சிங்கப்பூர் 6ஆவது இடத்திலும் அதற்கடுத்து இந்தியா, சீனா, செக் குடியரசு, ஸ்பெய்ன் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.


Pengarang :