SELANGOR

வட்டார ‘பவர்ஹவுஸ்’ கருத்தரங்கு: மூன்று முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்படும்

ஷா ஆலம், ஜூலை 10:

இம்மாதம் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலாங்கூர்: வட்டார பவர்ஹவுஸ் கருத்தரங்கில் விண்வெளித் துறை, எதிர்கால தொழில்நுட்பம் மற்றும் விவேக மாநிலம் ஆகிய மூன்று முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கை அளிக்கும் மாநிலமாக இருப்பதோடு கடந்த 10 ஆண்டுகளில் 191 மில்லியன் வெள்ளி அந்நிய முதலீட்டைப் பெற்ற மாநிலமாகவும் திகழும் சிலாங்கூர் மேம்பாடடைந்த நாடாக உருவாகும் மலேசியாவின் இலக்கை அடைய உதவுவதற்கு உறுதி பூண்டுள்ளது.

மூன்று பிரிவுகளாக நடத்தப்படவிருக்கும் இக்கருத்தரங்கில் சிலாங்கூரில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கொள்கை இயற்றுபவர்களும் தொழில்துறை உரிமையாளர்களும் விவாதிப்பர். அதே வேளையில், இந்த இலக்கை அடைவதற்கு அரசாங்க மற்றும் அரசாங்க தொழில்துறை ஆகியவை எவ்வாறு ஒத்துழைக்க முடியும் என்பது குறித்தும் விவாதிக்கப்படும்” என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

“மேலும், நீடித்த வாழ்க்கை முறைக்கு விவேக மாநகரங்கள் என்ற தலைப்பில் அரசாங்கத் தலைவர்கள் உரையாற்றுவர். இந்தத் தலைப்பில் முன்னணி தொழில்துறை உரிமையாளர்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பர்” என்றும் அவர் சொன்னார்.


Pengarang :