RENCANA PILIHANSELANGOR

2019 முதல் காலாண்டு வரை 75 தொழிற்சாலைத் திட்டங்களுக்கு அங்கீகாரம்

ஷா ஆலம், ஜூலை 31-

1,521 பில்லியன் வெள்ளி மதிப்பிலான முதலீட்டை உட்படுத்தும் 75 தொழிற்சாலைந்த் திட்டங்களுக்கு இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரையில் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அங்கீகாரம் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இவற்றில் 954,109,774 வெள்ளி உள்நாட்டு முதலீடு என்றும் 567,463,792 வெள்ளி அந்நிய முதலீடு என்றும் முதலீடு, தொழில்துறை மற்றும் வர்த்தகம், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

இதில் 1,126,208,695 வெள்ளி மதிப்பிலான 51 புதிய திட்டங்களும் அடங்கும் என்றும் எஞ்சியவை விரிவாக்கம் காணும் திட்டங்கள் என்றும் அவர் விளக்கமளித்தார்.
“குறுகிய மற்றும் நீண்ட கால அடிப்படையில் வியூகத் திட்டத்தின் வாயிலாக மாநிலத்திற்குள் அதிக முதலீடுகளைக் கவரும் நடவடிக்கை தொடரும்” என்றார்.


Pengarang :