NATIONAL

அந்நிய மதபோதகர்கள் மலேசிய சூழ்நிலையை புரிந்துக் கொள்ள வேண்டும்

கோத்தா பாரு, ஆகஸ்ட் 18:

மலேசிய நாட்டின் பல்லின மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் சூழ்நிலையை வெளிநாட்டு சமய போதகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் முஜஹீட் யூசோப் அறிவுறுத்தினார். அவர்களின் சமய போதனைகளால் மக்களிடையே சச்சரவுகள் ஏற்பட்டால் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று நினைவுபடுத்தினார்.

” மலேசிய நாட்டின் பல்லின மக்களுக்கு அந்நிய சமய போதகர்களின் அணுகுமுறை ஒத்துவராது. வெளிநாட்டில்  இருந்து வருபவர்கள் நம் நாட்டு சகோதரத்துவ தன்மை மிகுந்த மக்களின் வாழ்க்கை முறைகளை மதிக்க வேண்டும். நாம் பல்வேறு தடைகளை தாண்டி ஒருமைப்பாடு கொண்ட மலேசியாவை உருவாக்கி உள்ளோம். இந்த நினைவுறுத்தல் இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாம் அல்லாதோர் அனைவருக்கும் இது பொருந்தும்,” என்று மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசினார்.


Pengarang :