SELANGOR

இணைய வர்த்தக ஆற்றலைக் கற்றுக்கொள்ளுங்கள்! – வி. கணபதிராவ்

டெங்கில், ஆக.13-

வரைவு திட்டத்தின் கீழ் தொழில்முனைவர்களாக உருவெடுக்கவிருப்பவர்கள், உலக டிஜிட்டல் வளர்ச்சிக்கு ஏற்ப தங்கள் வர்த்தகத்தை இணையம் வாயிலாக விரிவாக்கம் செய்வதற்கான ஆற்றலைப் பெற்றிருப்பது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது.

ஏனெனில், உணவுப் பொருட்கள் முதல் சமையல் பொருட்கள் வரை அனைத்து பொருட்களையும் இணையம் வழி ஆர்டர் செய்யும் அளவுக்கு அனைத்து வங்கி பரிவர்த்தனைகளும் இணையம் வாயிலாகப் புரிய தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது என்று சமூக பொருளாதார மேம்பாட்டு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் வி. கணபதிராவ் கூறினார்.

“இணையம் வழியிலான வர்த்தகம் புரிய கற்றுக் கொள்வதால், தங்களது குடும்ப வருமானம் உயர்வதோடு சொகுசான வாழ்க்கை முறையையும் அனுபவிக்கலாம்” என்றார் அவர்.

“நடப்பு வர்த்தக முறையை மாற்றியமைத்து, புதிய தொழில்நுட்பத்தின் துணையோடு அதிக வருமானம் ஈட்ட வழி தேடுங்கள்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 1.1 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்து ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த 290 விண்ணப்பதாரர்களுக்கு இயந்திரப் பொருட்கள் உதவியை மாநில அரசாங்கம் அங்கீகரித்துள்ளது என்று கணபதிராவ் தெரிவித்தார்.


Pengarang :