SELANGOR

ஐந்து முக்கிய தொழில்துறைகள் மீது கவனம் செலுத்தப்படும்! – மந்திரி பெசார் அமிருடின் ஷாரி

ஷா ஆலம், ஆக.9-

மாநிலத்தின் விண்வெளி, இயந்திரவியல், மின்சாரம், உபகரணம் மற்றும் மின்னியல் ஆகிய முக்கிய தொழில்துறைகளின் டிஜிட்டல் தொடர்பு முறை மீது மாநில அரசு கவனம் செலுத்தவிருக்கிறது.
எனவே, உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இந்தத் தொழில்துறைகளை மேம்படுத்தவும் மாநிலத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு துணை புரியவும் மத்திய அரசாங்கம் நியாயமான நிதி உதவி வழங்க வேண்டும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

“இணைய தொடர்பு ஆற்றலை உயர்த்துவதன் மூலம் குறுகிய காலத்தில் முக்கிய மாநிலமாக உருவெடுக்கும் இலக்கை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையில் இதுவும் அடங்கும்” என்றார் அவர்.

“விரிவான இணைய ஆற்றல் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக திகழும் சிலாங்கூர் , 89.2 விழுக்காட்டில் இருந்து 100 விழுக்காடாக உயர்வதற்கு அதன் செம்பு கம்பிகளுக்குப் பதிலாக கண்ணாடியை பயன்படுத்த வேண்டும்” என்றும் அவர் ஆலோசனை கூறினார்.


Pengarang :