Amirudin Shari ditemui media selepas sesi Dialog Bajet 2020 Membudaya Komuniti Sihat ke arah “Selangor Maju Bersama” berlangsung di Hotel Concorde, Shah Alam berakhir. Foto ASRI SAPFIE/SELANGORKINI
NATIONALRENCANA PILIHAN

காசநோயாளிகளுக்கான உதவித் திட்டம்! மாநில அரசு பரிசீலிக்கும்

ஷா ஆலம், ஆக.13-

காச நோயால் பாதிப்புற்றவர்களுக்கு 500 வெள்ளி உதவி வழங்கும் பரிந்துரையை மாநில அரசு பரிசீலனை செய்யும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த உதவித் தொகை சுமார் ஆறு மாதங்களுக்கு சம்பந்தப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு உதவியாக அமையும் என்றார் அவர்.

இந்த நோயால் பாதிப்புற்றவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக் கூடிய தொடர் நடவடிக்கை குறித்தும் மாநில அரசு ஆராய்ந்து வருவதாக அவர் சொன்னார்.
இந்த விவகாரம் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும் காசநோய் பிரச்னையை எதிர்கொள்ள மற்றும் தடுப்பதற்கான வழி வகைகளும் ஆராயப்பட்டு வருவதாக அமிருடின் தெரிவுத்தார்.

அடுத்த ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் சுகாதாரம் அம்சம் குறித்து ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் அரசாங்கம் பரிசீலிக்கும் என்றார் அவர்.


Pengarang :