NATIONALRENCANA PILIHAN

கேஎல்ஐஏ 21ஆம் ஆண்டு கொண்டாட்டத்தில் பிரதமரும் மந்திரி பெசாரும் பங்கேற்றனர்

ஷா ஆலம், ஆக.14-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் 21ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் பிரதமர் துன் டாக்டர் மகாதீருடன் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கலந்து கொண்டார்.

ஒரு செம்பனை தோட்டம் இன்று ஓர் அழகிய விமான நிலையமாக காட்சியளிப்பதோடு நாட்டின் அடையாள சின்னமாகவும் உருவாகி இருப்பதைக் கண்டு துன் மகாதீர் பெருமிதம் அடைந்தார்.

“இது ஓர் அற்புத கட்டடக் கலையாகும். இவ்வேளையில் இதன் கட்டட வடிவமைப்பாளரான காலஞ்சென்ற ஜப்பான் கட்டட வரைப்பட கலைஞர் கிஷோ குரொகாவை நினைவு கூர விரும்புகிறேன். ‘காட்டுக்குள் ஒரு விமான நிலையம்’, ‘விமான நிலையத்தில் ஒரு காடு’ என்ற கோனத்தில் இக்கட்டடம் உருவானது” என்று மகாதீர் சொன்னார்.

“இந்நிகழ்வு ஒரு வரலாற்றுப்பூர்வ நிகழ்ச்சியாகும். ஏனெனில், இந்த விமான நிலையம் குறித்து கனவு கண்ட மாமனிதர் இன்று இது நாட்டின் ஓர் அடையாளச் சின்னமாக கம்பீரமாக நிற்பதை காண்கிறார்” என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.


Pengarang :