Pemandangan di sekitar bandar raya Shah Alam
SELANGOR

சிலாங்கூரின் காற்றின் தரக் குறியீடு ஆரோக்கியமற்ற அளவை எட்டியது

ஷா ஆலம், ஆக.20-

சிலாங்கூரின் காற்றின் தரக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக சுற்றுச் சூழல் இலாகாவின் அறிக்கை தெரிவித்தது.

கிள்ளான் ஜோஹான் செத்தியா பகுதியின் காற்றுத் தரக் குறியீடு செவ்வாய்க்கிழ்மை காலை 9 மணிக்கு 101 என ஆரோக்கியமற்ற நிலையைப் பதிவு செய்ததாக அவ்வறிக்கை கூறியது.

செவ்வாய்க்கிழமை காலையில் பெட்டாலிங் ஜெயா (81), ஷா ஆலம் (80), பந்திங் (75) போன்ற நகரங்களின் காற்றின் தரம் மத்திம நிலையில் இருந்ததாக அவ்விலாகா மேலும் தெரிவித்தது.

காற்றின் தரக் குறியீடு 50 வரையில் பாதிப்பில்லை என்றும் 51 முதல் 100 வரையில் மத்திமம் என்றும் 101க்கு மேல் 200க்குள் ஆரோக்கியமற்ற சூழல் என்றும் 201ஐத் தாண்டினால் அபாயம் என்றும் வகைப்படுத்தப்பட்டிருப்பதாக அவ்வறிக்கை விளக்கம் அளித்தது.


Pengarang :