Amirudin Shari (tengah) mengibar bendera Malaysia bersama wakil Jabatan Penerangan dan peserta kembara merdeka dalam Majlis Makan Malam Kembara Merdeka di Kediaman Rasmi Menteri Besar, Shah Alam pada 22 Ogos 2019. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

ஜாலோர் கெமிலாங்கை சிறுமைப் படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை

ஷா ஆலம், ஆக.23-

நாட்டின் ஒருமைப்பாட்டு சின்னமாகத் திகழும் ஜாலூர் கெமிலாங்கைச் சிறுமைப்படுத்தும் நடவடிக்கைகளை மாநில அரசு கடுமையாக எதிர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஒரு சில தரப்பினரின் இத்தகைய இழிவான செயல் சம்பந்தப்பட்டவர்களின் தெளிவற்ற சிந்தனை மற்றும் சித்தாந்தத்தைக் காட்டுகிறது என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

இந்தத் தரப்புகளின் செய்லானது நாட்டில் இதுவரை கட்டிக் காக்கப்பட்டு வ்ரும் ஒருமைப்பாட்டிற்கு பங்கம் விளைவிப்பதாக இருக்கிறது என்றார் அவர்.

“இவர்களின் வாதம் எதுவாக இருப்பினும், நாட்டின் சுதந்திரம் மற்றும் நாட்டின் மீது நாம் கொண்டுள்ள விசுவாசத்தைக் களங்கப்படுத்தும் எதனையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார்.


Pengarang :