NATIONAL

நவீன வசதிகள் நிறைந்த மொத்த வியாபார சந்தை தேவை! அரசாங்கத்திடம் பரிந்துரை

கோலாலம்பூர், ஆக. 6-

கோலாலம்பூர் மொத்த வியாபாரிகள் (பிபிகேஎல்) சந்தையின் வரம்பு சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட சேவைகள் வழங்கக்கூடிய புதிய சந்தை ஒன்றை நிர்மாணிப்பது குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மலேசிய போட்டியாற்றல் ஆணையம் (மைசிசி) 2010ஆம் ஆண்டு போட்டியாற்றல் சட்டத்தின் கீழ் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்ட விபரங்களின் அடிப்படையில் அப்பரிந்துரை செய்யப்பட்டது..

கூடுதலான நடவடிக்கை கட்டணம், அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள், சட்ட விரோதமாக கடைகளை வாடகை எடுத்து நடத்தும் அந்நிய நாட்டவர்கள் ஆகிய விவகாரங்களோடு குற்றச்செயல்கள் நிறைந்த ஒரு பகுதியாக இச்சந்தை திகழ்வதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக உள்நாட்டு வாணிகம் மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபூடின் நசுத்தியோன் கூறினார்.

“மின் வர்த்தக வசதிகள் உட்பட பல்வேறு நவீன வசதி மற்றும் சேவைகள் ஆகியவற்றுடன் பொருத்தமான பகுதியில் ஒரு புதிய சந்தையை உருவாக்கும்படி அமைச்சுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது” என்றார் அவர்.


Pengarang :