C Sree Abiraame bersama bapanya B. Chendren Balakrishnan menunjukan replika cek tajaan ketika Majlis Penyerahan Tajaan Pihak Swasta Kepada Atlet Luncur Ais Negeri Selangor di Majlis Sukan Negeri Selangor, Shah Alam pada 23 Ogos 2019.- Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
SELANGORSUKANKINI

பனிச்சறுக்கு  வீராங்கனை ஸ்ரீ அபிராமி ஒலிம்பிக்கில் பங்கேற்க ஓம்ஸ் அறவாரியம் வெ. 8 லட்சம் நிதியுதவி!

ஷா ஆலாம், ஆக. 23-

வரும் 2026 ஆம் ஆண்டில் இத்தாலியில் நடைபெறவிருக்கும் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பனிச்சறுக்கு விளையாட்டு வீராங்கனை ஸ்ரீ அபிராமி சந்திரன் கலந்து கொண்டு முத்திரை பதிப்பதற்கு ஏதுவாக 8 லட்சம் வெள்ளி செலவை ஏற்றுக் கொள்ள ஓம்ஸ்  அறவாரியம் முன் வந்துள்ளது.

ஏழு ஆண்டு பயிற்சியை இது உள்ளடக்கியிருக்கும். முதல் கட்டமாக செப்டம்பர் 16 ஆம் தேதி தொடங்கி இரு வாரங்களுக்கு ரஷியாவில் , ‘மாருபெஸ் லெடுஸ் ஸ்கோலா’ அனைத்துலக பனிச்சறுக்கு பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெறுவார் என்று கூறப்பட்டது.

சிறுமி ஸ்ரீ அபிராமி ( எட்டு வயது) 72 மணி நேர பயிற்சியைப் பூர்த்தி செய்ய வேண்டும். இதற்குத் தகுதி பெற்ற பின்னர் ரஷியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு   பயிற்சியைத் தொடர்வார்.

அனைத்துலக ரீதியில் சாதனை படைப்பதற்கு வயது ஒரு தடை அல்ல என்பதை இந்த இள வயது வீராங்கனை நிரூபித்திருப்பதாக சிலாங்கூர் தேசிய விளையாட்டு மன்றத்தின் நிர்வாக அதிகாரி அடி  ஃபைசால் அகமது தர்மிஸி தெரிவித்தார்.


Pengarang :