NATIONAL

புயலால் சேதமுற்றை வீடுகளை மறுசீரமைக்க வெ. 5 ஆயிரம் உதவி

அலோர்ஸ்டார், ஆக.13-

கெடாவில் கடந்த வெள்ளிக்கிழமை பெய்த புயல் மழையால் சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்குத் தங்கள் வீடுகளைச் சரிசெய்வதற்கு தேசிய பேரிடர் நிர்வாக நிறுவனம் (நாட்மா)) 5 ஆயிரம் வெள்ளி வரை உதவி செய்யவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

புயலால் சேதமுற்றவர்களுக்கான உதவி குறித்து விவாதிக்க நேற்று கூடிய கூட்டத்தில் இந்த முதல் கட்ட உதவி குறித்த முடிவு எடுக்கப்பட்டதாக கெடா மாநிலத்தின் மகளிர் மற்றும் குடும்ப மேம்பாடு, வறுமை ஒழிப்பு மற்றும் சமூக நலத் துறை செயற்குழு தலைவர் ஹலிமாத்தோன் ஷாடியா கூறினார்.

சேதமடைந்த வீடுகளுக்கு அதிகபட்சம் 5 ஆயிரம் வெள்ளி வரை நாட்மா உதவி செய்வதெனவும் வீடுகளை மறுசீரமைக்கும் நடவடிக்கைக்காக இந்தத் தொகை பொது தற்காப்பு படையிடம் ( ஏபி எம்) வழங்கவும் இக்கூட்டம் மெடிவெடுத்தாக அவர் சொன்னார்.

இந்த உதவித் தொகையானது சேதமுற்றை வீடுகளை மறுசீரமைக்க மட்டுமே என்றும் அதில் தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் இதர கட்டடங்கள் உட்படுத்தப்படவில்லை என்றும் ஹலிமாத்தோன் தெரிவித்தார்.


Pengarang :