NATIONAL

பேங்க் நெகாரா: வாங்கும் சக்திக்கேற்ற வீட்டு கடனுதவி திட்டம்: நிபந்தனைகளில் மாற்றம்

கோலாலம்பூர், ஆக.22-

ஒரு பில்லியன் வெள்ளி மதிப்பிலான ‘வாங்கும் சக்திக்கேற்ற’ வீடுகளுக்கான கடனுதவி திட்டத்திற்குத் தகுதி பெறுவதற்கான நிபந்தனைகளை பேங்க் நெகாரா விரிவுபடுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கடனுதவிக்குத் தகுதி பெறுவோரின் வருமானம் 2,300 வெள்ளியில் இருந்து 4,360 வெள்ளியாக உயர்த்தப்படுவதோடு வீடுகளின் கூடுதல்பட்ச மதிப்பு 150,000 வெள்ளியிலிருந்து 300,000 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளதாக அதன் கவர்னர் டத்தோ நோர் ஷம்சியா முகமது யூனுஸ் கூறினார்.

செப்டம்பர் முதல் தேதி தொடக்கம் அமலுக்கு வரும் இந்த நிபந்தனைகள் குறைந்த வருமானம் பெறுவோரில் அதிகமானோர் சொந்த வீடுகளை வாங்க வழி வகுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே, இவ்வாண்டு ஜூன் மாத இறுதி வரையில் 31 மில்லியன் வெள்ளி மதிப்பிலான 296 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கவர்னரின் உதவியாளர் அட்னான் ஜைலானி முகமது ஸாஹிட் செய்தியாளர்களிடம் கூறினார்.


Pengarang :