RENCANA PILIHANSELANGOR

பொதுமக்களின் பாதுகாப்பு விவகாரத்தில் சிலாங்கூர் கூடுதல் கவனம் செலுத்தும்

சுபாங், ஆக. 5-

பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதி ஆகியவற்றில் சிலாங்கூர் ஒரு போதும் விட்டுக் கொடுக்கும் போக்கைக் கடைபிடிக்காது என்று தெரிவிக்கப்பட்டது.
இவ்விரு விவகாரங்கள் தொடர்பாக ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்குத் தேவையான பயிற்சிகள் மற்றும் பல தரப்பினருடனான ஒத்துழைப்பை நாடுவதற்கு மாநில அரசு எப்போதும் தயாராக இருப்பதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

“கடந்த ஜூலை 22 தொடங்கி 25ஆம் நாள் வரையில் சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்தில் பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொள்வது குறித்து மலேசிய ஏர்போர்ட் பெர்ஹாட் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சிக்குப் பின்னர் இவ்வாண்டு இரண்டாவது முறையாக பாதுகாப்பு பயிற்சி நடத்தப்படுகிறது.” என்றார் அவர்.

இது போன்ற பயிற்சிகளை ஒவ்வோர் அமைப்பும் நடத்துவது அவசியமாகும். நடப்பு நடைமுறைகளில் உள்ள பலவீனங்களைக் களைவதற்கும் அவற்றை மேம்படுத்துவதற்கும் இந்நிகழ்ச்சிகள் உதவும். எதிர்காலத்தில் நிகழக்கூடிய எதிர்பாராத பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சிலாங்கூர் மாநில பாதுகாப்பு மன்றம் மற்றும் பெட்ரோனாஸ் எரிவாயு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து டேபிள் டோப் எக்சர்சைஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த கருத்தரங்கைத் தொடக்கி வைத்து மந்திரி பெசார் மேற்கண்டவாறு உரையாற்றினார்.


Pengarang :