ECONOMYNATIONAL

மலேசியாவில் இருந்து தருவிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட செம்பனை எண்ணெய் வரியை இந்தியா அதிகரிக்கும்

புதுடில்லி, ஆக, 27:

மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட செம்பனை எண்ணெய்க்கான வரவேற்பு அதிகரித்துள்ளதால், அதன் வரியும் உயர்த்தப்பட வேண்டும் என்று இந்திய வர்த்தக துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

சுத்திகரிக்கப்பட்ட செம்பனை எண்ணெய் மீதான வரி உயர்வுக்கு நிதியமைச்சு சம்மதித்தால் அப்பொருளை எந்த நாடும் ஏற்றுமதி செய்தாலும் அதன் நடப்பு வரி 10 விழுக்காடு உயர்த்தப்படும் சாத்தியம் உள்ளதாக இந்தத் தொழிற்துறை கழகம் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.

மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட செம்பனை எண்ணெய்யை அதிகளவில் இந்தியா இறக்குமதி செய்து வருவதாக அக்கழகம் கூறியது.

முன்னதாக, இவ்வாண்டு தொடக்கத்தில் சுத்திகரிக்கப்படாத செம்பனை எண்ணெய்க்கான இறக்குமதி வரியை 44 விழுக்காட்டில் இருந்து 40 விழுக்காடாக குறைக்கப்பட்ட வேளையில், சுத்திகரிக்கப்பட்ட செம்பனை எண்ணெய்க்கான வர 54 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :