berkata aktiviti pendakian Bukit Panau merupakan inisiatif beliau bersama rakan sekampungnya bagi menyemarakkan sambutan Bulan Kemerdekaan.
NATIONALRENCANA

மெர்டேக்கா கொண்டாட்டத்தை மெருகூட்டும் மலையேறும் நடவடிக்கை

தானா மேரா, ஆக.27:

ஜாலோர் கெமிலாங்கைப் பறக்க விடுவதால் மட்டும் நாடு மீது நாம் கொண்டுள்ள பற்று மற்றும் நேசத்தை வெளிப்படுத்த முடியாது . மெர்டேக்கா மாதம் முழுவதிலும் தேச உணர்வை ஊக்குவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் மக்கள் மத்தியில் தேசப் பற்றை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

தானா மேரா புக்கிட் பானாவ் மலையேறிகள் அங்குள்ள பல்வேறு வரலாற்று கூறுகளை நினைவுகூருவதன் மூலம் இந்த மெர்டேக்கா மாதத்தில் தேசப் பற்றை வெளிப்படுத்துகின்றனர்.

தன்னுடைய மற்றும் தனது நண்பர்களின் சுதந்திர மாத கொண்டாட்டத்தை மெருகூட்டும் புக்கிட் பானாவ் மலையேறும் நடவடிக்கை குறித்து கம்போங் சியாம் காற்பந்தாட்ட பயிற்சியாளர் முகமது அமிருல் அமின் ஹாருண் கீழ்க்கண்டவாறு விவரித்தார்.

“முன்பெல்லாம் கும்பலாக மோட்டார் சைக்கிளோட்டியதன் வழி மெர்டேக்கா மாதத்தைக் கொண்டாடிய நாங்கள் இம்முறை மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டு மிகுந்த உற்சாகமடைகிறோம்” என்றார் அவர்.


Pengarang :