NATIONAL

மை சலாம் திட்டத்தினால் காப்புறுதி நிறுவனத்திற்கு லாபமில்லை!

ஷா ஆலம், ஆக.21-

தேசிய எழுத்தாளர்கள் கழகம் (அகார்) கூறியிருப்பதுபோல் பி40 பிரிவினருக்கான மை சலாம் பாதுகாப்புத் திட்டம் எந்தவொரு நிறுவனத்திற்கும் லாபத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்படவில்லை என்று நிதியமைச்சு தெரிவித்தது.

மாறாக, இது இத்திட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ள குறைந்த வருமானம் பெறும் 3.8 மில்லியன் பேருக்கு அரசாங்கம் வழங்கும் பாதுகாப்பாகும் என்று அமைச்சு கூறியது.

தாக்காஃபுல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பிரிமியம் தொகையில் கோரப்படாத தொகை யாவும் மை சலாம் அறவாரிய நிதியிடம் திரும்பச் செலுத்தப்படும் என்று நிதியமைச்சு வெளியிட்ட அறிக்கை விளக்கமளித்தது.

மை சலாம் திட்டத்தின் வழி எந்தவொரு காப்புறுதி நிறுவனமும் லாபம் அடையாது என்பதை அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியது.. சினார் ஹராப்பான் நாளேட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்றும் தீய நோக்கம் கொண்டவை என்றும் அவ்வறிக்கை கூறியது.


Pengarang :