Bayaran BSH fasa ketiga akan dikredit ke akaun penerima pada 28 Ogos 2019. Foto BERNAMA
NATIONALRENCANA PILIHAN

வாழ்க்கைச் செலவின உதவித் திட்டம்: 3ஆவது கட்ட தொகை புதன்கிழமை வழங்கப்படும்

கோலாலம்பூர், ஆக.26:

வாழ்க்கைச் செலவின் உதவித்திட்டத்தின் (பி எஸ் எச்) மூன்றாம் கட்ட தொகை கடந்த இரண்டாம் தவணைக் கட்டணம் செலுத்தப்பட்டது போன்று சம்பந்தப்பட்ட வங்கிகளின் கணக்கில் இவ்வாரம் புதன்கிழமை சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கட்டணத்திற்காக மொத்தம் 1.23 பில்லியன் வெள்ளி செலவிடப்படும் வேளையில் இது 3.6 மில்லியன் பேருக்கு பயனளிக்கும் என்று நிதியமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

இத்திட்டத்தில் பதிந்து கொண்டவர்களின் குடும்ப வருமானம் மாதம் ஒன்றுக்கு 2 ஆயிரம் வெள்ளிக்குக் குறைவாக இருந்தால் 400 வெள்ளியும் குடும்ப வருமானம் 2,001 வெள்ளி முதல் 3 ஆயிரம் வெள்ளி வரை இருந்தால் 300 வெள்ளியும் 3,001 வெள்ளி முதல் 4,000 வெள்ளி வரை இருந்தால் 100 வெள்ளியும் பெறுவர் என்று அது கூறியது.

இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் வழங்கிய முதல் தவணை நிதிக்காக 2.85 பில்லியன் வெள்ளி செலவிடப்பட்டதாகவும் மே மாதத்தில் இரண்டாம் கட்ட நிதியுதவி வழங்கப்பட்டபோது இத்திட்டத்தில் பங்குபெற்றவகளின் பிள்ளைகள் ஒவ்வொருக்கும் ( கூடிய பட்சம் 4 பிள்ளைகள்) 120 வெள்ளி கூடுதலாக வழங்கப்பட்டதாக அவ்வறிக்கை குறிப்பிட்டது.


Pengarang :