V Ganabatirau bersama Datuk RS Mohan Shan (dua dari kiri) bergambar bersama peserta Majlis Pertandingan 42th Thirumurai Recital Contest 2019 anjuran Malaysia Hindu Sangam di SJKT Batu Caves. Foto ASRI SAPFIE/SELANGORKINI
SELANGOR

800 மாணவர்கள் 2019-ஆம் ஆண்டின் திருமுறை விழாவில் கலந்து கொண்டனர்

கோம்பாக், ஆகஸ்ட் 25:

பத்து கேவ்ஸ் தேசிய வகை தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற 2019-ஆம் ஆண்டிற்கான  திருமுறை ஓதும் போட்டியில் 800 இந்து சமயத்தை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ் கூறினார். மலேசிய இந்து சங்கத்தின் 55-ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த திருமுறை ஓதும் போட்டி இளையோரின் சமய உணர்வை மேலோங்கி இருப்பதற்கு ஏற்பாடு செய்திருந்ததாக கணபதி ராவ் தெரிவித்தார்.

” திருமுறை ஓதும் விழா இளையோரின் சமய அறிவை மேலோங்க செய்கிறது. இளையோர் இந்த போட்டியில் மூலம் சமூக சீர்கேடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க முடியும். அரசு சாரா இயக்கங்களில் ஒன்றான மலேசிய இந்து சங்கம் ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சி சமுதாயத்திற்கு மிகவும் இன்றியமையாதது. ஆகவே, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மலேசிய இந்து சங்கத்திற்கு எனது நன்றி. நிதி பற்றாக்குறை ஏற்பட்டாலும், சமய நெறி மற்றும் பயனான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த வரும் இந்து சங்கத்தை நான் பாராட்டுகிறேன்,” என்று திருமுறை ஓதும் போட்டியில் கலந்து கொண்ட போது இவ்வாறு கணபதி ராவ் கூறினார்.

மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ ஆர்எஸ் மோகன் ஷான் கணபதி ராவோடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மாநில அரசாங்கம் சங்கத்தின் சமய நிகழ்ச்சிகளுக்கு நிதி உதவி அளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


Pengarang :