NATIONALRENCANA PILIHAN

அதிகாரிகளின் உடலில் காமிரா பொருத்தும் நடவடிக்கை: சுங்க துறை இலாகா வரவேற்றது

போர்ட்டிக்சன், செப்.25-

அமலாக்க அதிகாரிகளின் உடலில் காமிராவை பொருத்துவதன் மூலம் அவர்களின் நிபுணத்துவ தரம் உயர்வதோடு அவர்கள் மீது பொறுப்பற்ற தரப்பினர் கூறும் அவதூறுகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்று அரச மலேசிய சுங்க துறை தலைமை இயக்குநர் டத்தோ பெட்டி அப்துல் ஹாலிம் கூறினார்.

எனவே. சுங்க துறை உட்பட போலீஸ், குடிநுழைவு துறை அமலாக்க அதிகாரிகளின் உடலில் காமிராவை பொருத்தும் அரசாங்கத்திம் பரிந்துரையை சுங்க துறை பெரிதும் வரவேற்பதாக அவர் சொன்னார்.
“உடலில் காமிரா பொருத்தப்படுவதால், அமலாக்க அதிகாரிக்கு எந்தவொரு மன அழுத்தமும் ஏற்பட வாய்ப்பில்லை மாறாக நிபுணத்துவ முறையில் நடவடிக்கை எடுப்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தும்” என்றார் அவர்.

“மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரி தனது கடமையை நேர்மையாக ஆற்றுவதற்கும் பொறுப்பற்ற தரப்பினரின் அவதூறுகளில் இருந்தும் விடுபடலாம்” என்றும் அவர் சொன்னார்.


Pengarang :