PUTRAJAYA, 1 Ogos — Reaksi Perdana Menteri Tun Dr Mahathir Mohamad ketika ditemui pemberita selepas majlis perjumpaan bersama guru-guru bekas penuntut Kota Bharu Teacher College (Ex-KBTC) 2019 malam ini. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

அதிகாரிகள் உடலில் காமிரா பொருத்தும் நடவடிக்கை அரசாங்கம் அனுமதி

புத்ராஜெயா, செப்.20:

அரசு அதிகாரிகள் மத்தியில் ஊழல் போன்ற முறைகேடுகளைக் குறைக்கும் வகையில் போலீஸ், குடிநுழைவு மற்றும் சுங்கத் துறை அமலாக்க அதிகாரிகளில் உடலில் காமிராக்கள் பயன்படுத்தும் நடைமுறைக்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

விசாரணைக்கு உட்படுத்தப்படும் நபர்களை அடிப்பது உட்பட பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் அமலாக்க அதிகாரிகள் ஈடுபடுவதாக அதிக எண்ணிக்கையிலான புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளதால், இந்த நடைமுறையை பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் துன் மகாதீர் கூறினார்.

“காமிரா பொருத்தப்பட்ட அதிகாரிகள் பேசுவதும் அவருடன் மற்றவர் உரையாடுவதும் பதிவு செய்யப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரியின் நடவடிக்கையும் பதிவு செய்யப்படும்” என்றும் அவர் சொன்னார்.

துன்புறுத்தல் நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரிகளின் செயலை மறுக்கக்கூடும், ஆனால் பாதிக்கப்பட்டவர் அச்செயலை உறுதிப்படுத்துவதற்கு இப்பதிவு உதவியாக இருக்கும் என்றார் அவர்.


Pengarang :