Handout picture released by the Communication Department of the State of Mato Grosso showing firefighter combating a fire in the Amazon basin in the municipality Sorriso, Mato Grosso State, Brazil, on August 26, 2019. (Photo by Mayke TOSCANO / Mato Grosso State Communication Department / AFP) / RESTRICTED TO EDITORIAL USE – MANDATORY CREDIT “AFP PHOTO / MATO GROSSO STATE COMMUNICATION DEPARTMENT / MAYKE TOSCANO” – NO MARKETING – NO ADVERTISING CAMPAIGNS – DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS
ANTARABANGSA

அமேசன் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்

சாவ் பாவ்லோ, செப்.2:

அமேசன் பள்ளத்தாக்குப் பகுதியில் இதுவரை 3,859 தீச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ள வேளையில் இவற்றில் 2000 சம்பவங்கள் அமேசன் பகுதியில் நிகழ்ந்திருப்பதாக தேசிய விண்வெளி ஆய்வு கழக துணைக் கோள புள்ளிவிவரம் கூறியுள்ளது.
எரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கம் தடை விதித்த முதல் 48 மணி நேரத்திற்குள் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையே இது என்று அறியப்படுகிறது.

பிரேசிலில் ஏற்பட்ட 88816 தீச்சம்பவங்களில் கடந்த ஜனவரி தொடங்கி ஆகஸ்ட் இறுதி வரை 59.9 விழுக்காடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பிரேசில், அமேசன் வட்டாரத்தில் தற்போது வறட்சி நிலை காணப்படுகிறது.

எனினும், கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு நிலைமை சற்று குளிர்ந்து காணப் படுவதோடு அந்த மழைக் காட்டுப் பகுதியில் தீ இயற்கையாக ஏற்படாது என்று நிபுணர்கள் திட்டவட்டமாகக் கூறினர்.


Pengarang :