NATIONAL

இனத்துவாதம் மற்றும் மதம் சம்பந்த விவகாரங்களை எழுப்பாதீர்கள் !!!

கோலா லம்பூர், செப்டம்பர் 2:

பல்லின மக்கள் வாழ்ந்து வரும் மலேசிய நாட்டில் இனரீதியான மற்றும் மதம் சம்பந்தப்பட்ட விவகாரங்களை எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம் என்று பொது மக்களை புக்கிட் அமான் குற்றவியல் விசாரணை பிரிவின் இயக்குனர் டத்தோ ஹூஸீர் முகமட் எச்சரிக்கை விடுத்துள்ளார். நடப்பில் உள்ள சட்டத்தைக் கொண்டு பொது அமைதிக்கும் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கும் மிரட்டலை தொடர்ந்து ஏற்படுத்தி ஊறு விளைவிக்கும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறை மும்முரமாக செயல்படும் என்றார்.

சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவங்கள் செக்சன் 505(சி) சித்ரவதை நியதி (கெகெ) கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளது என்றும் பொது மக்களுக்கு எதிராக துரோக நடவடிக்கையில் ஈடுபடும் எந்த நபரோ அல்லது இனத்தை சேர்ந்தவரோ, ஒரு இனத்தை இனத்துவாத சித்தாந்தத்தை தூண்டும் செயலாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்  நினைவு படுத்தினார்.


Pengarang :