dav
PBTSELANGOR

கட்டுமான உரிம சேவை உருமாற்றத் திட்டம்: எம்பிஎஸ்ஏவை வீடமைப்பு, ஊராட்சி அமைச்சு தேர்வு செய்தது

ஷா ஆலம், செப்.3-

மாநிலத்தின் முக்கிய கட்டுமான உரிமம் உருமாற்றத் திட்டத்தை வெற்றி பெறச் செய்யும் நோக்கத்தில் முன்னோடி மாநகரமாக ஷா ஆலமமை உருவாக்க ஷா ஆலம் (எம்பிஎஸ்ஏ) நகராண்மைக் கழகத்தை வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சு தேர்வு செய்துள்ளது.

நாட்டின் கட்டுமானத் தொழில்துறையில் உருமாற்றத்தை கொண்டு வர ஊராட்சி மன்றங்களின் உரிமம் வழங்கும் சேவை முறையை வலிப்படுத்த இத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக ஷா ஆலம் டத்தோ பண்டார் டத்தோ ஹாரிஸ் காசிம் கூறினார்.
இத்திட்டமானது ஊராட்சி மன்றத்தின் கட்டுமான உரிமம் வழங்கும் சேவை மேலும் சிறப்படைவதோடு அதிக மூதலீட்டாளர்களையும் ஊக்குவிக்கும் என்றும் அவர் சொன்னார்.

இங்குள்ள எம்பி எஸ் ஏ மண்டபத்தில் நடைபெற்ற கட்டுமான உரிமம் வழங்கும் சேவை முறை உருமாற்றத் திட்டம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்த கையெழுத்திடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது டத்தோ ஹாரிஸ் மேற்கண்ட தகவல் வெளியிட்டார்.


Pengarang :