Yang Dipertua MPAJ
PBTSELANGOR

கம்பீர தோற்றத்தில் அம்பாங்!

ஷா ஆலாம், செப். 18-

அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் (எம்பிஏஜே) மற்றும் வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சின் ஒத்துழைப்புடன் இங்குள்ள அம்பாங் போயிண்ட் பின்புறத்தை அழகுபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள் மக்களைக் கவர்ந்த இடமாக அம்பாங்கை உருவாக்கியுள்ளது.

இப்பகுதியில் துப்புரவு பணிகள், பளிங்கு கல் தரை அமைத்தல், சுற்றுவட்டார பகுதியை இணைக்கும் நடைபாதை அமைத்தல், அலங்கார விளக்குகள் மற்றும் ரகசிய காமிராக்களைப் பொருத்துதல், மின்சார மற்றும் 3டி ஓவியங்கள் போன்றவை இப்பகுதிக்கு மேலும் அழகு சேர்த்திருப்பதாக அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக தொழில் தொடர்பு பிரிவு அதிகாரி நோர்யாத்தி அகமது கூறினார்.

“அம்பாங் மக்களை வெகுவாகக் கவர்ந்த பகுதியாக மிளிர வேண்டும் என்ற நோக்கத்திற்காக மாமாண்டா 7 சாலையின் பின்புறத்தை அழகுப்படுத்தும் பணியை நாங்கள் மேற்கொண்டோம்” என்றார் நோர்யாத்தி.

“அம்பாங் சுற்றுப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சமூக நடவடிக்கைகளைப் பிரதிபலிக்கும் வகையில் இதன் கொள்கை மற்றும் கருப்பொருள் அமைந்துள்ளது” என்று அவர் மேலும் கூறினார். 20 அடி உயரம் கொண்ட 14 வர்த்தக கட்டிடங்களை அழகுப்படுத்துவதும் இதில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.


Pengarang :