Ramli Tahir memberi penerangan Foto REMY ARIFIN
RENCANA PILIHANSELANGOR

குப்பை நிரம்பிவிட்டதை அறிவிக்கும் சென்சர் சாதனம்!

ஷா ஆலம், செப்.4-

குப்பைத் தொட்டிகள் நிரம்பியவுடன் அது துப்புரவு செய்யப்பட வேண்டியதை அறிவிக்கும் சென்சர் சாதனத்தை லீச் பின் எனும் குப்பைத் தொட்டிகளில் பொருத்துவது குறித்து சிலாங்கூர் விவேக சேவைப் பிரிவுடன் ( எஸ்எஸ்டியு) பேச கேடிஇடபள்யூ எனும் கழிவு நிர்வாக நிறுவனம் பேசும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தொட்டி நிரம்பித் தழும்புவதன் காரணமாக அப்பகுதியின் தோற்றம் அலங்கோலப்படுவதை இது தவிர்க்கும் என்று கேஇடபள்யூ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமட் தாஹிர் கூறினார்.
அட்டவணைப்படி குப்பைத் தொட்டிகள் துப்புரவு செய்யப்பட்டாலும், குப்பைத் தொட்டியில் அதிகளவு குப்பை சேர்வதால் விரவில் அது நிரம்புவதோடு மிதமிஞ்சிய குப்பைகள் கீழே சிதறுகின்றன என்றார் அவர்.

எனவே, தொட்டி நரம்பிவிட்டதை அறிவிக்கும் கருவி பொருத்தப்பட்டால், அது நிரம்பியவுடன் அட்டவணைக்கு முன்னரே சுத்தப்படுத்தப்படுவதற்கு ஏதுவாக இருக்கும்.


Pengarang :