Struktur kediaman di tanah rizab Sungai Kedondong, Paya Jaras dirobohan pada 18 September 2019. Foto
RENCANARENCANA PILIHANSELANGOR

சட்டவிரோத வீடுகள் உடைப்பு: யூபிகேகே, பிடி3 தேர்வுகளுக்காக 3ஆவது தடவை ஒத்திவைப்பு

பெட்டாலிங் ஜெயா, செப்.23-

அரச மலேசிய போலீஸ் படை, சிலாங்கூர் நில மற்றும் கனிம அலுவலகம், ஊராட்சி மன்றங்கள், தெனாகா நேஷனல் பெர்ஹாட் மற்றும் ஆயர் சிலாங்கூர் ஆகிய தரப்புகளுடன் இணைந்து பெட்டாலிங் மாவட்ட மற்றும் நில அலுவலகம் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி சுங்கை கெடொண்டோங் அரசாங்க நிலத்தில் உள்ள சட்டவிரோத குடியேற்ற குடியிருப்புகளை உடைத்தது.

இந்த நடவடிக்கை இதுவரை 3 தடவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி, 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 22 மற்றும் இறுதியாக இவ்வாண்டு செப்டம்பர் 5ஆம் தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சம்பந்தப்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் மாணவர்கள் யூபிகேகே மற்றும் பிடி3 தேர்வுகள் எழுதுவதற்கு இடையூறை ஏற்படுத்தாதிருக்க இம்முறை இந்த அமலாக்க மூன்றாம் தடைவாயாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்த குடியிருப்புகள் உடைப்பு நடவடிக்கையானது அரசாங்க நிலங்களில் சட்டவிரோத முறையில் குடியேறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வக செய்யும் தேசிய நில சட்டப் பிரிவு 425இன் கீழ் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.


Pengarang :