KUCHING, 16 Sept — Perdana Menteri Tun Dr Mahathir Mohamad (dua, kanan) menyaksikan Ketua Menteri Sarawak Datuk Patinggi Abang Johari Tun Openg menandatangani Buku Khas Sambutan Hari Malaysia 2019 sempena sambutan Hari Malaysia di Stadium Perpaduan hari ini. Turut sama Menteri Komunikasi dan Multimedia Gobind Singh Deo (kanan). –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

சரவாக் எப்போதும் மலேசியாவின் ஒரு பகுதியாக இருக்கும்! – சரவாக் முதலமைச்சர் உறுதி

கூச்சிங், செப்.17-

சரவாக் எப்போதும் மலேசியாவின் ஒரு பகுதியாக இருக்கும் என்பதோடு எழுகின்ற பிரச்னைகள் யாவும் ஒரு குடும்பத்தின் விவகாரமாகத் தீர்வு காணப்படும் என்று முதலமைச்சர் டத்தோ பாதிங்கி அபாங் ஜோகாரி துன் ஓபேங் கூறினார்.

எம்ஏ63 சிறப்பு செயற்குழுவும் மலேசியாவும் விவாதித்த விவகாரங்கள் யாவும் தீபகற்ப மலேசியா, சபா மற்று சரவாக் மக்களை மேலும் ஒன்றிணைத்து வலுவூட்டும் என்று மாநில அரசாங்க உறுப்பினர் நம்புகின்றனர் என்று அவர் வலியுறுத்தினார்.

“இந்த விவகாரத்தில், நல்லதொரு தீர்வு காணும் நோக்கத்தில் சிறப்பு செயற்குழுவை அமைத்த பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன்” என்றார் அவர்.

“மலேசிய உடன்படிக்கையை அமல்படுத்துவது தொடர்பான இந்த விவாதத்திற்கு துன் அவர்கள் தலைமையேற்றுள்ளார்” என்றும் அவர் சொன்னார்.


Pengarang :