Dato’ Menteri Besar, Amirudin Shari menyampaikan ucapan perasmian dalam Program Gotong-Royong Merdeka 2019 Peringkat Kampung Sungai Tua Baharu, Batu Caves, pada 8 September 2019. Foto ASRI SAPFIE/ SELANGORKINI
SELANGOR

சிலாங்கூரின் அபார வளர்ச்சி ! – மந்திரி பெசார் பெருமிதம்

ஷா ஆலம், செப்.11-

நாட்டின் கடந்த ஆண்டு உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 23.7 விழுக்காட்டை சிலாங்கூர் மாநிலம் பங்களித்த்து. நாட்டின் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் சிலாங்கூரே அதிக உற்பத்தி செய்யும் மாநிலம் என்ற பெருமையை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது.

2016ஆம் ஆண்டு 22.7 விழுக்காடாக இருந்த உள்நாட்டு மொத்த உற்பத்தி 2017ஆம் ஆண்டு 23 விழுக்காடாக உயர்ந்த வேளையில், மாநிலத்தின் அடைவு நிலை ஓர் அசாதாரண சாதனை என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

அடிப்படை வசதிகள் மற்றும் தொலை தொடர்பு தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த மாநிலம் என்பதால் நாட்டில் மிகவும் மேம்பாடடைந்த மாநிலமாக சிலாங்கூர் திகழ்கிறது என்று அவர் பெருமிதம் கொண்டார்.

இங்குள்ள கோன்கோர்ட் ஹோட்டலில் நடைபெற்ற ஹாங் காங் சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் சங்கத்துடனான உரையாடலின் மந்திரி பெசார் மேற்கண்டவாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் துறைமுகம், தொழில்துறை மற்றும் போக்குவரது ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம், அச்சங்கத்தின் செய்ற்குழு உதவி தலைவர் லியுங் சுன் யிங் மற்றும் அதன் பேராளர்களும் பங்கேற்றனர்.


Pengarang :