Keadaan jerebu di Klang yang dirakam pada 10 Septembe
NATIONALRENCANA PILIHAN

சிலாங்கூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் மாநிலங்களில் தூய்மைக்கேடு குறுயீடு ஆரோக்கியமற்றதாக குறிக்கிறது!!!

ஷா ஆலம், செப்.10-

சிலாங்கூர் மற்றும் மலாக்காவைச் சேர்ந்த பெரும்பாலான வட்டாரங்களில் காற்று தூய்மைக்கேடு குறியீடு 100ஐ தாண்டி ஆரோக்கியமற்ற சூழலில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

நெகிரி செம்பிலானில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காற்று தூய்மைக்கேடு குறியீடு (ஐபியு) ஆரோக்கியமற்ற சூழலில் இருப்பதைக் காட்டுகிறது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி நிலவரப்படி, கோல சிலாங்கூர் பகுதியைத் தவிர்த்து இதர பகுதிகளில் காற்று தூய்மைக்கேடு குறியீடு ஆரோக்கியமற்ற சூழலைக் காட்டுவதாக சுற்றுச் சூழல் இலாகாவின் அகப்பக்கம் கூறியுள்ளது.

ஜோகான் செத்தியா பகுதியின் காற்று குறியீடு 162ஐ பதிவு செய்த வேளையில் பெட்டாலிங் ஜெயா (149), ஷா ஆலம் (140), கிள்ளான் (118) மற்றும் பந்திங் (123) ஆகிய அனைத்து பகுதிகளிலும் காற்று தூய்மைக்கேடு குறியீடு ஆரோக்கியமற்ற சூழலில் இருந்ததாக அது தெரிவித்தது.


Pengarang :