Ng Sze Han bersama Yang Dipertua Majlis Perbandaran Klang (MPK), Dato’ Yasid Bidin memotong riben sebagai simbolik perasmian pelancaran Bas Smart Selangor Laluan KLG 3A di Dewan Hamzah, Klang pada 10 September 2019. Foto ASRI SAPFIE/SELANGORKINI
PBTRENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் ஸ்மார்ட் பேருந்து சேவை; கிள்ளானில் அதிகமானோர் பயன்பெற்றுள்ளனர்!

கிள்ளான், செப்.11-

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் வரையில், கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் (எம்பிகே) அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியில், மொத்தம் 5,219,564 பேர் சிலாங்கூர் ஸ்மார்ட் பேருந்து சேவையை பயன்படுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

அந்த எண்ணிக்கையில், மொத்தம் 3,944,337 பேர் கிள்ளான் 1ஆவது பாதையில் பயணித்துள்ளனர் என்று எம்பிகே தலைவர் டத்தோ முகமது யாசிட் பிடின் கூறினார்.
“இந்தப் பாதையானது கிள்ளான் நகரம், ஜாலான் ஸ்டேஷன், ஜாலான் இஸ்தானா, பெர்சியாரான் ராஜா மூடா மூசா, ஜாலான் கிம் சுவான், ஜாலான் பத்து உஞ்சுர், பெர்சியாரான் அம்புவான் ரஹிமா மாறும் ஜாலான் ராயா பாராட் ஆகியவற்றௌ உட்படுத்தும்” என்றார் அவர்.

அதேவேளையில் கிள்ளான் 2ஆவது பாதையானது கிள்ளான் நகரம், ஜாலான் பாசார், லெபோ தாப்பா, ஜாலான் பெக்கான் பாரு, ஜாலான் மேரு, ஜாலான் பாஹாகியா மற்றும் ஜாலான் ஹாஜி சிராட் ஆகியவற்றை உபடுத்தியிருப்பதாக அவர் மேலும் சொன்னார்.


Pengarang :