NATIONAL

சுகாதாரப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம்: வெ 2.3 பில்லியன் முதலீட்டிற்கு அங்கீகாரம்

கோலாலம்பூர், செப்.4-

சுகாதாரம் தொடர்பான பொருட்களை உட்படுத்திய 2.3 பில்லியன் வெள்ளி மதிப்பிலான 21 தயாரிப்பு பொருட்கள் திட்டங்களை மீடா எனப்படும் மலேசிய முதலீட்டு மேம்பாடு வாரியம் அங்கீகரித்துள்ளது. 1980 ஆண்டு தொடங்கி இதுவரை இந்த அங்கீகரங்கள் அளிப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

அந்தத் தொகையில் 2.2 பில்லியன் வெள்ளி அந்நிய முதலீடு என்றும் எஞ்சிய 125 மில்லியன் வெள்ளி உள்நாட்டு முதலீடு என்று மீடா கூறியது.. கிள்ளான், புக்கிட் ராஜாவில், ஹாங்காங்கின் பிரசித்திபெற்ற வீண்டா குழுமத்தின் அடிக்கல் நாடு விழாவை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் மீடா தெரிவித்தது.

சிறார் பயன்படுத்தும் லம்பின் துவாலை), மகளிர் சுகாதாரத் துவாலை போன்ற சுகாதாரம் தொடர்பான பொருட்கள் வெளியீட்டில் பிரசித்தி பெற்று விளங்கும் லிண்டா குழுமம் இங்கு தனது தலைமையகத்தை நிறுவும் திட்டத்தை அனைத்துலக வர்த்தக அமைச்சின் முதன்மை பிரச்சார நிறுவனமான மீடா வரவேற்பதாக அவ்வறிக்கை குறிப்பிட்டது.


Pengarang :