NEW YORK, Sept 26 — Malaysian Prime Minister Tun Dr Mahathir Mohamad (center) speaking at the Sustainable Development Goals Summit – Leaders Dialogue 6 on ‘The 2020-2030 Vision’, at the United Nations (UN) headquarters here on Wednesday. Dr Mahathir is in New York for the 74th Session of the UN General Assembly. –fotoBERNAMA (2019) COPYRIGHTS RESERVED
ANTARABANGSANATIONALRENCANA PILIHAN

சுற்றுச் சூழலைப் பேணும் உடன்படிக்கை : மலேசியா உறுதியாக உள்ளது! – துன் மகாதீர்

நியூயார்க், செப்.27-

விலங்குகள், வனப் பகுதிகள் மற்றும் சுற்றுச் சூழலைப் பேனும் உலக உடன்படிக்கை முழுமையாக செயல்படுத்துவதை உறுதிசெய்வதில் மலேசியா கடப்பாடு கொண்டுள்ளது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.

இப்பூமியில் வாழும் அனைத்து மக்களின் உணவு, உடை மற்றும் வசிப்பிட உரிமை மீதான பொறுப்பை நிறைவேற்றுவதில் இந்த சுற்றுச் சூழல் உடன்படிக்கை எல்லா கோணங்களிலும் சமமாக உள்ளதை நாடு உணர்ந்துள்ளது என்று மலேசிய பிரதமர் தெரிவித்தார்.

அதேவேளையில், 1992ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற உலக உச்சநிலை மாநாட்டின் போது உலகின் 50 விழுக்காடு நிலப்பகுதி வனமாக இருப்பதை நிலைநிறுத்துவது குறித்து கையெழுத்திடப்பட்ட இந்த உடன்படிக்கையில் நாடு உறுதியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு ஆண்டுகள் 30ஐ கடந்துள்ள வேளையில் மலேசிய நிலப்பகுதியின் 55.3 விழுக்காடு அல்லது 18.3 மில்லியன் ஹெக்டர் பகுதி இன்னமும் வனமாக இருப்பதை தெரிவிப்பதில் பெருமையடைகிறேன். அளித்த வாக்குறுதியை நாங்கள் மீறவில்லை” என்று மகாதீர் கூறினார்.


Pengarang :