NATIONALRENCANA

செய்திகளின் நம்பகத்தன்மையை ஆராய்வீர்!

கோலாலம்பூர், செப்.30:

இவ்வாண்டு செப்டம்பர் 23ஆம் தேதி வரையில் சமூக வலைதளங்களில் பரப்பட்ட தவறான தகவல்கள் அடங்கிய 11 செய்திகள் குறித்து ‘செபெனார்னியா டாட் மை’ எனும் அகப்பக்கம் பல்வேறு விளக்கக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மலாய்க்காரர்களை வேலையாட்களாக பணிக்கமர்த்தி போலியான ஹலால் சான்றிதழை வைத்து இஸ்லாமிய உணவகம் போன்ற தோற்றத்தில் 13 உணவகங்களை இஸ்லாம் அல்லாதவர்கள் நடத்தி வந்துள்ளதாக அன்மையில் எழுந்துள்ள விவகாரம் குறித்தும் தொடர்பு பல்லூடக ஆணையம் நிர்வகிக்கும் இந்த அகப்பக்கம் விளக்கம் அளித்துள்ளது.

இவ்விவகாரம் குறித்து கருத்துரைத்த மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா (ஜாக்கிம்) இக்குற்றச்சாட்டை வன்மையாக மறுத்துள்ளது. இணையம் வழியாக குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பல்வேறு அவதூறுகளுக்கு விளக்கம் அளிக்கும் இந்த அகப்பக்கம் இதுவரை மொத்தம் 135 விளக்கக் கட்டுரைகளை பிரசுரித்துள்ளது.


Pengarang :