NATIONAL

தெங்கு அட்னான் கையூட்டு வழக்கு : ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படும்!

கோலாலம்பூர், செப்.20-

இங்குள்ள ஜாலான் செமாராக்கில் மேற்கொள்ளப்பட்ட சொத்துடமை திட்டத்தில் சம்பந்தப்பட்ட ஒரு நிறுவனத்தின் விகிதாச்சாரத்தை அதிகரிக்க அந்நிறுவனத்திடமிருந்து முன்னாள் கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் கையூட்டு பெற்றதற்கான ஆதாரங்கள் வாதி தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஜாலான் செமாராக், லோட் 228இல் மேற்கொள்ளப்பட்ட சொத்துடமை திட்டத்தில் தங்களின் விகிதாச்சாரத்தை அதிகரிக்க நியுக்லெஸ் புரோபெர்ட்டிஸ் ( தற்போது பாராகோன் சிட்டி டெவலப்பமெண்ட் என்றழைக்கப்படுகிறது) செய்த விண்ணப்பத்தையும் மேல்முறையீட்டையும் டிபிகே எல் நிராகரித்தது. அந்த விகிதாச்சாரம் உயர்த்தப்படுவதற்கு உதவி புரிவதற்கா சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்கிய குற்றஞ்சாட்டப்பட்டவர் பெற்ற விவரங்கள் அந்த ஆதாரங்கள் காட்டும் என்று அரசு தரப்பு துணை வழக்கறிஞர் ஜூலியா இப்ராஹிம் கூறினார்.

டான் எங் சூன் என்பவரிடமிருந்து பெறப்பட்ட பெக்கான் நெனாஸ் இண்டஸ்திரிஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 300109 எனும் பப்ளிக் பேங் காசோலை குற்றஞ்சாட்டப்பட்டவரின் சிஐஎம்பி வங்கியின் 14200008384058 எனும் கணக்கில் சேர்ப்பிக்கப்பட்டது என்று உயர் நீதிமன்ற நீதிபதி முகமது நஸ்லான் முகமது கசாலி முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் ஜூலியா தெரிவித்தார்.

புத்ராஜெயா நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மற்றும் கூட்டரசு பிரதேச அமைச்சர் எனும் தனது பதவியினால், மேம்பாட்டு திட்டங்கள் தொடர்புடைய அமைப்புகளில் தனக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு குற்றஞ்சாட்டப்பட்டவர் உதவியுள்ளார் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :