NATIONALRENCANA PILIHANSELANGOR

பணி ஓய்வு வயது அதிகரிப்பு பரிந்துரை: 93 விழுக்காடு இனணய தள பயனர்கள் அதிருப்தி

ஷா ஆலாம், செப். 4-

கட்டாய பணி ஓய்வு வயதை 60தில் இருந்து 65ஆக உயர்த்தும் அரசாங்கத்தின் பரிந்துரை குறித்து கருத்து பெறப்பட்ட 6,200 இனணய தள பயனர்களில் சுமார் 93 விழுக்காட்டினர் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

சிலாங்கூர் ஊடகம் முகநூலில் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த விவரம் பெறப்பட்டது. நேற்று முன்தினம் பிற்பகல் மணி 12.34க்கும் இன்று காலை மணி 9.00க்கும் இடையே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது.

5,700 பேர் இந்த பரிந்துரையை ஆதரிக்காத வேளையில் 452 பேர் (ஏழு விழுக்காடு) மலேசியர்கள் பணி ஓய்வு பெறுவதற்குப் பொருத்தமான வயது 60 முதல் 65 ஆகும் என்று சிலாங்கூர் கினி மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சிங்கப்பூர் உட்பட மேம்பாடடைந்த சில நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுபோல் பணி ஓய்வு வயதை உயர்த்தலாம் என்ற மலேசிய தொழிற்சங்க காங்கிரஸின் பரிந்துரையை பரிசீலனை செய்ய தாங்கள் தயாராக இருப்பதாக மனித வள அமைச்சர் எம். குலசேகரன் கூறியதைத் தொடர்ந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


Pengarang :