NATIONAL

பண்டார் கமூடா அடுக்கு சந்திப்புச் சாலை டோல் சாவடி வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு செயல்படத் தொடங்கும்

டெங்கில், செப். 6-

இலைட் நெடுஞ்சாலையின் 26ஆவது கி.மீட்டரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பண்டார் கமூடா கோவ் அடுக்கு சந்திப்புச் சாலையின் டோல் சாவடி வெள்ளிக்கிழமை இரவு 11 மணி செயல்படத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

150 மில்லியன் வெள்ளி செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த அடுக்கு நெடுஞ்சாலை சந்திப்பானது டெங்கில் வாசிகள் சிப்பங், புத்ராஜெயா மற்றும் சைபர்ஜெயா அகிய நகரங்களுக்கு விரைந்து செல்லும் வசதியை ஏற்படுத்தும் என்று பொதுப்பணி அமைச்சர் பாரு பியான் கூறினார்.

சிறப்பான அடிப்படை வசதிகளோடு நிர்மாணிக்கப்பட்டுள்ள அடுக்கு சந்திப்புச் சாலைகள் காரணமாக , இதுவரை வெகுதூரம் என்ற சலிப்படைத மக்களும் இனி எளிதாக பல இடங்களுக்குச் செல்ல இதனைப் பயன்படுத்துவர் என்றார் அவர்.
புத்ராஜெயா அடுக்கு சந்திப்புச் சாலைக்கும் கே எல் ஐ ஏ அடுக்கு சந்திப்புச் சாலைக்கும் மத்தியில் அமைந்திருக்கும் இந்த பண்டார் கமூடா அடுக்கு சந்திப்புச் சாலையை 2 ஆண்டுகள் தேவைப்பட்டதாக அவர் சொன்னார்.


Pengarang :