NATIONALRENCANA PILIHAN

பிடிபிடிஎன் கடனை அடைக்க உதவும் முதலாளிகளுக்கு வரிச் சலுகை

கோலாலம்பூர், செப்.6:

ஒவ்வொரு முதலாளி, நிறுவனம் அல்லது அமைப்பும் தனது பணியாளர்களின் நலனைக் காக்க தனித்தனி சலுகைகள் அல்லது ஊக்குவிப்பு தொகை வழங்குவது வழக்கம். பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் மருத்துவ செலவினம், பல் மற்றும் கண் சிகிச்சைக்கான கட்டணம் போன்றவற்றை ஏற்றுக் கொள்வது உண்டு. ஆனால், இப்போது பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் கல்வி மேம்பாட்டிலும் கவனம் செலுத்த முற்பட்டுள்ளன.

கடந்த 2019 வரவு செலவு திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடந்ர்து பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் பிடிபிடிஎன் கடனை அடைக்க உதவி வருகின்றன. அந்த வகையில், வெக்டோர் இன்ஃபோதெக் நிறுவனம், தனது பணியாளர்களின் பிடிபிடிஎன் கடனை அடைத்துள்ளது. இந்த நடவடிக்கையால், அந்நிறுவனத்திற்கு வரிச் சலுகை கிடைத்தோடு அதன் பணியாளர்கள் அங்கு நீண்ட கால பணிபுரிவதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் ஹீ டிங் சின் கூறினார்.

கடன் அடைந்த மகிழ்ச்சியில் சமப்ந்தப்பட்ட பணியாளர்கள் தங்கள் பணிகளை மேலும் சிறப்பாக ஆற்றுவதோடு நிறுவனத்திற்கு விசுவாசமாக இருப்பதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :