This aerial picture taken on September 20, 2019 shows haze covering the city of Palembang, South Sumatra. – Indonesia is battling forest fires causing toxic haze across southeast Asia with aircraft, artificial rain and even prayer, President Joko Widodo said during a visit to a hard-hit area. (Photo by ABDUL QODIR / AFP)
NATIONALRENCANA PILIHAN

புகைமூட்டம் மோசமடைந்ததால் மலேசிய மாணவர்கள் கோலாலம்பூர், ஜாக்கர்த்தாவிற்கு அனுப்பப்பட்டனர்

ஜாக்கர்த்தா, செப்.25-

புகைமூட்டம் காரணமாக இந்தோனேசியாவின் ரியாவ் பகுதியில் அவசர காலம் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளதால், அங்குள்ள நூற்றுக் கணக்கான மலேசிய மாணவர்கள் கோலாலம்பூர் மற்றும் ஜாக்கர்த்தாவிற்கு அனுப்பப்பட்டனர்.

முதல் கட்டமாக பெக்கான் பாருவில் இருந்து ஏர் ஆசியா விமானம் மூலம் 40 மாணவர்கள் செவ்வாய்க்கிழமை காலை மணி 10.55 கோலாலம்பூருக்கு அனுப்பப்பட்டனர்.
இரண்டாவது கட்டமாக 31 மாணவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை மணி 4.15 மணிக்கு ஏர் ஆசியா விமானத்தில் புறப்பட்டு மாலை 6.10 மணிக்கு கோலாலம்பூர் சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அதேவேளையில், மொத்தம் 35 மலேசிய மாணவர்கள் பெக்கான் பாருவில் இருந்து பாத்தேக் ஏர் விமானம் மூலம் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மாலை 6.45 மணிக்கு ஜாக்கர்த்தா சென்றடைந்தனர் என்று தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பு (நாட்மா) ஓர் அறிக்கையில் தெரிவித்தது.


Pengarang :