SELANGOR

பொறுப்பற்ற தரப்புகளின் நடவடிக்கைகளால் 203 குழாய் உடைப்பு சம்பவங்கள்

கோலாலம்பூர், செப்.23-

ஆயர் சிலாங்கூர் நிர்வாகத்தின் பதிவேட்டின்படி இவ்வாண்டு ஜனவரி தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை 203 தண்ணீர் குழாய் உடைப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 53 பகுதிகளில் 85 தடவை இச்சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் 27,985 கணக்குகள் இதனால் பாதிப்புற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

புள்ளி விவர அறிக்கையின்படி இக்கால கட்டத்தில் தாமான் தாசேக் பெர்டானாவில் 15 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதற்கு அடுத்த நிலையில் கம்போங் பாண்டான், ஜாலான் ஆயர் பானாஸ், ஸ்தாப்பாக் ஆகிய பகுதிகளிலும் அதிக எண்ணிக்கையிலான குழாய் உடைப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று ஆயர் சிலாங்கூரின் தலைமை நிர்வாக அதிகாரி சுஹைமி கமருல்சஸ்மான் கூறினார்.

பெட்டாலிங் வட்டாரத்தில் ஜாலான் கூச்சாய் லாமா பகுதியிலும் அதிக எண்ணிக்கையிலான குழாய் உடைப்பு சம்பவங்கள் நடைபெற்றிருந்ததாகவும் கிள்ளான் வட்டாரத்தில் தாமான் செந்தோசா, தாமான் ஜோஹான் செத்தியா, ஜாலான் கெபுன் மற்றும் கம்போங் ஜாவா ஆகிய பகுதிகளிலும் இச்சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்றார் அவர்.

இதனிடையே, உலு லங்காட் வட்டாரத்தில் பண்டார் மக்கோத்தா செராஸ், தாமான் டாமாய் இண்டா, சுங்கை சுவா தொழிற்பேட்டை பகுதி மற்றும் கம்போங் சுங்கை பாலாக் ஆகிய பகுதிகளிலும் பல்வேறு குழாய் உடைப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :