KUCHING, 16 Sept — Antara peserta yang menjayakan persembahan sambutan Hari Malaysia 2019 Peringkat Kebangsaan di Stadium Perpaduan Petra Jaya malam ini. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

மக்களின் ஒருமைப்பாட்டு உணர்வோடு மலேசிய தின கொண்டாட்டம்

கூச்சிங், செப்.17-

இங்குள்ள பெத்ராஜெயா பெர்பாடுவான் அரங்கத்தில் நடைபெற்ற 2019 மலேசிய தின கொண்டாட்டத்தில் தீப்கற்ப மலேசியா , சபா மற்றும் சரவாக் மக்கள் என 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டிருந்தது, மக்களின் ஐக்கிய உணர்வை தெளிவாக எடுத்துக் காட்டியது.

புகைமூட்டம் சூழ்ந்திருந்த போதிலும் ஏழு மணிக்கு உள்ளூர் பாடகர்களின் நிகழ்ச்சி தொடங்கிய வேளையில், மாலை மணி 5 முதல் பொது மக்கள் அரங்கத்தில் திரளத் தொடங்கிவிட்டனர். முன்னதாக இந்நிகழ்ச்சி பாடாங் மெர்டேக்கா திறந்த வெளியில் நடப்பதாக இருந்தது. ஆயினும், இடமாற்ற நடவடிக்கையால் பொது மக்கள் சற்றும் சஞ்சலமடையவில்லை. மாறாக, பிரதமர் துன் மகாதீர், முதலைமைச்சர் டத்தோ பாதிங்கி ஜோகாரி, ஆகியோரின் உரையை செவிமடுப்பதற்காக அரங்கம் முழுவதும் கூடியிருந்தனர்.

கொண்டாட்ட நிகழ்ச்சியின் உச்சகட்டமாக, துன் மகாதீர் தனது ஆட்சி காலத்தில் வெளியிட்ட தேசிய வாகனமான சிவப்பு நிற புரோட்டோன் சாகா காட்சிக்கு வைக்கப்பட்டது நாட்டின் மேம்பாட்டு வரலாற்றை நினைவுகூரியது.


Pengarang :