SEPANG, 24 Ogos — Operasi di Lapangan Terbang Antarabangsa Kuala Lumpur (KLIA) mula beransur pulih selepas mengalami gangguan sistem sejak 22 Mac lepas ketika tinjauan fotoBernama sehingga 10 pagi tadi. Kelihatan pesawat-pesawat Malaysia Airline telah bersedia untuk berlepas. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

மலேசிய விமான நிறுவன பிரச்னை: எளிதாகத் தீர்க்க முடியாது! – துன் மகாதீர்

கோலாலம்பூர், செப்.17-

கஸானா நேஷனல் பெர்ஹாட் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்டிருக்கும் மலேசிய விமான நிறுவனத்தின் சிக்கலுக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கம் தொடர்ந்து ஈடுபட்டிருப்பதாக துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.

“இது ஓர் எளிய காரியம் இல்லை..நாம் நிறைய செய்துவிட்டோம். இந்நிறுவனத்திற்கு 6 பில்லியன் வெள்ளியை வழங்கியதுடன் 6,000 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்றார் அவர்.

“ஆள் பலத்தின் எண்ணிக்கையை குறைத்த வேளையில், பயண எண்ணிக்கையும் குறைந்ததால், நிறுவன நடவடிக்கையோடு தொழிலாளர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால், எந்தவொரு மாற்றமும் இல்லை” என்று பிஎஃப்எம் வானொலி நிலையத்திற்கு அளித்த பேட்டியில் மகாதீர் குறிப்பிட்டார்.

இந்நிறுவனம் மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமாக இருக்க வேண்டும் என்று பலர் விரும்புகின்றனர். ஆயினும், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய மலேசிய நிறுவனங்கள் எதுவும் இதுவரையில் முன்வரவில்லை என்றார் அவர்.


Pengarang :